/உள்ளூர் செய்திகள்/தேனி/ இடுக்கியில் இயல்பு நிலைக்கு திரும்பிய சுற்றுலா பகுதிகள் இடுக்கியில் இயல்பு நிலைக்கு திரும்பிய சுற்றுலா பகுதிகள்
இடுக்கியில் இயல்பு நிலைக்கு திரும்பிய சுற்றுலா பகுதிகள்
இடுக்கியில் இயல்பு நிலைக்கு திரும்பிய சுற்றுலா பகுதிகள்
இடுக்கியில் இயல்பு நிலைக்கு திரும்பிய சுற்றுலா பகுதிகள்
ADDED : ஜூன் 30, 2024 05:28 AM

மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் பருவ மழை தீவிரமடைந்ததால் சுற்றுலா பகுதிகளுக்கு ஜூன் 25ல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
குறிப்பாக படகு சவாரி உள்பட நீர் நிலைகளில் அனைத்து பொழுது போக்கு அம்சங்களுக்கும், டிரக்கிங் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. அவை மூன்று நாட்கள் முடங்கிய நிலையில் மாவட்டத்தில் மழை குறைந்ததாலும், வானிலை ஆய்வு மையம் எவ்வித முன்னெச்சரிக்கைகளை விடுக்கவில்லை என்பதாலும் கட்டுப்பாடுகளை தளர்த்தி நேற்று முன்தினம் மாலை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அவை நேற்று வழக்கம்போல் செயல்பட துவங்கியதால் சுற்றுலா பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பின. அதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.