ADDED : ஜூன் 30, 2024 05:24 AM
போடி, : போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் போடி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தலைமை ஆசிரியர் மரிய சங்கம் தலைமை வகித்தார். ஆசிரியர் சந்திரகலா வரவேற்றார். வழக்கறிஞர் ரவீந்திரன், பொறுப்பு அலுவலர் சையது அபுதாஹீர் கலந்து கொண்டு பாலியல் வன்கொடுமை, சிறுவர்களை துன்புறுத்துவுதல், பொது இடங்களில் இடர்கள் ஏற்படும் போது தங்களை பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறினர்.