ADDED : ஜூன் 21, 2024 04:59 AM

தேனி: தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று திருவாசகம் படித்தனர். நடராஜர், சிவகாமி அம்மாள், மாணிக்க வாசகர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். முற்றோதல் நிகழ்ச்சியை சிவனடியார் கூட்டத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கோயில் குருக்கள் கணேசன் கூறுகையில், 'ஆண்டு தோறும் ஆனி மாதம் மாணிக்க வாசகருக்கு உகந்த நாளில் திருவாசகம் முற்றோதல் நடத்தப்படுகிறது', என்றார்.