/உள்ளூர் செய்திகள்/தேனி/ மக்காச்சோளம் விளைச்சல், விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி மக்காச்சோளம் விளைச்சல், விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
மக்காச்சோளம் விளைச்சல், விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
மக்காச்சோளம் விளைச்சல், விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
மக்காச்சோளம் விளைச்சல், விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 21, 2024 05:00 AM

போடி: மாவட்டத்தில் மக்காச்சோளம் விளைச்சல், விலையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
போடி, மீனாட்சிபுரம், அம்மாபட்டி, பத்திரகாளிபுரம், காமராஜபுரம், பெருமாள் கவுண்டன்பட்டி, அணைக்கரைப்பட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். மக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அதிகளவில் இல்லாததால் மற்ற பயிர்கள் பயிடுவதை காட்டிலும் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த ஆண்டு மக்காச்சோளம் போதிய விளைச்சல் இருந்த நிலையில் குவிண்டால் ரூ. 2200 முதல் ரூ 2400 வரை விற்பனையானது. இந்த ஆண்டு மக்காச்சோளம் விளைச்சல் மட்டுமின்றி விலையும் அதிகரித்து உள்ளது. தற்போது குவிண்டால் ரூ. 2500 முதல் ரூ. 2600 வரை விலை போகிறது. தற்போது நல்ல விலை கிடைப்பதால் மக்காச்சோளம் பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.
3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஊரடங்கால் வியாபாரிகள் அதிகளவு கொள்முதல் செய்யாததால் விலை குறைந்து குவிண்டால் ரூ. 1600 முதல் ரூ. 1800 ஆக விலை இருந்தது. இந்த ஆண்டு விளைச்சலும் விலையும் அதிகரித்துள்ளது.
நன்கு விளைந்த கலர் உள்ள மக்காச்சோளம் குவிண்டால் ரூ. 2500 முதல் ரூ. 2600 வரை விலை உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
செல்லப்பன், விவசாயி, பத்திரகாளிபுரம் :மக்காச்சோளத்திற்கு போதிய தண்ணீர் வசதி, நல்ல வளர்ச்சி இருந்தால் ஒரு ஏக்கருக்கு குறைந்தது 17 முதல் 20 குவிண்டால் மகசூல் கிடைக்கும். போதிய விளைச்சல் இல்லாத நிலையில்ஏக்கருக்கு 15 குண்டாலுக்கு குறைவாக கிடைக்கும். மழையால் நல்ல விளைச்சல், விலையும் அதிகரித்த உள்ளது. பத்திரகாளிபுரம், டொம்புச்சேரி பகுதியில் 17 குவிண்டால் வரை மகசூல் கிடைத்துள்ளதுஎன்றார்.