/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேசிய நீச்சல் போட்டிக்கு தேனி மாணவர் தேர்வு தேசிய நீச்சல் போட்டிக்கு தேனி மாணவர் தேர்வு
தேசிய நீச்சல் போட்டிக்கு தேனி மாணவர் தேர்வு
தேசிய நீச்சல் போட்டிக்கு தேனி மாணவர் தேர்வு
தேசிய நீச்சல் போட்டிக்கு தேனி மாணவர் தேர்வு
ADDED : ஜூலை 29, 2024 12:26 AM

தேனி : தமிழ்நாடு மார்டன் பெண்டத்லான் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் விளையாட்டு அரங்க வளாகத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடந்தது.
இதில் தேனி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர் ரனீஷ்கர் பங்கேற்றார். அவர் 1800 மீ., ஓட்டம், 150 மீ., நீச்சல், 15 சூட்டிங் ரவுண்ட் கொண்ட டிரையத்லி பிரிவில் வெள்ளி, 1660 மீ., ஓட்டம், 300 மீ., நீச்சல் கொண்ட பையத்லி பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றார். ஆக.,14 முதல் 18 வரை உத்ரகாண்ட் மாநிலம் காசிபூரில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகி உள்ளார். மாணவரை நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார், பள்ளி நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பராட்டினர்.