ADDED : ஜூலை 29, 2024 12:26 AM

தேனி: தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில், கம்பம் குலாலர் திருமண மண்டபத்தில் தம்பதிகளுக்கு இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் நடத்தது. கம்பம் நகராட்சி தலைவர் வனிதா, கவுன்சிலர்கள் அபிராமி விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர். கவுன்சிலர்கள் ராஜா, அன்புகுமாரி, ரோஜாரமணி, விஜயலட்சுமி, வீருசிக்கம்மாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் கருசிதைவால் பாதிக்கப்பட்டவர்கள், கருக்குழாய் அடைப்பு, விந்தனு குறைபாடு, கர்ப்பப்பையில் நீர்கட்டி உள்ளவர்களுக்கு அலட்ரா சவுண்ட் ஸ்கேன், விந்தனு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன. கருத்தரித்தல் சிறப்பு டாக்டர்கள் காதர்ஷா, சுலேகா, பிர்தவ்ஸ் பாத்திமா, கிறிஸ்டி மருத்துவ பரிசோதனைகள் செய்து, ஆலோசனை வழங்கினர். முகாம் ஏற்பாடுகளை மருத்துவமனை பொது மேலாளர் சாந்தி, எபிஜேம்ஸ், மக்கள் தொடர்பு அலுவலர் சலீம், ஷேக்பரீது, சையது அப்பாஸ் செய்திருந்தனர்.