Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ பன்னிரு திருமுறைப் பெருவிழா

பன்னிரு திருமுறைப் பெருவிழா

பன்னிரு திருமுறைப் பெருவிழா

பன்னிரு திருமுறைப் பெருவிழா

ADDED : ஆக 01, 2024 05:45 AM


Google News
சின்னமனூர்: சின்னமனூர் தெய்வீகப் பேரவை சார்பில் 23 ம் ஆண்டு நால்வர் விழா மற்றும் பன்னிரு திருமுறைப் பெருவிழா இரு நாட்கள் நடந்தது.

சைவ சமய குரவர்களாகிய திருநாவுக்கரசர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும், திரு அருட் செல்வர்களாகிய 63 நாயன்மார்களையும் வழிபடும் வகையில் சின்னமனூர் தெய்வீகப் பேரவை சார்பில் நால்வர் விழா மற்றும் பன்னிரு திருமுறைப் பெருவிழா கொண்டாடப்பட்டது.

நால்வருக்கும் அபிஷேக ஆராதனைகளும், சுவாமி புறப்பாடும் நடந்தது. நால்வர் வழிபாடு அபிஷேக ஆராதனைகளுக்கு முன்னதாக சிவகாமியம்மன் கோயிலில் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பெருங்குளம் ஆதினம் சிவப்பிரகாச தேசிக சத்ய ஞான பரம்மாச்சாரியார் சுவாமிகள், ராமேஸ்வரம் ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் நித்யானந்த மகராஜ், தேனி வேதபுரி சித்பவானந்த ஆசிரம தலைவர் சுவாமி பூர்ணானந்தா ஆகியோர் முதல் அமர்வில் ஆன்மிக சொற்பொழிவாற்றினார்கள்.இரண்டாம் நாளில் உலக உயிர்கள் நன்மை வேண்டியும், மழை வேண்டியும் தமிழ் திருமுறை ஒதுதல் நடந்தது. இதில் மதுரை சங்கர மடம் சங்கேந்திர சுவாமிகள், திண்டுக்கல் சைவ சமய பேரவை தலைவர் சிவகப்ரமணிய தம்பிரான், சென்னை சிவலோக திருமடத்தின் மடாதிபதி வாதவூர் அடிகள் பேசினர். அன்னதான நிகழ்ச்சியை சிலமலை பாண்டி முனீஸ்வரர், நகராட்சி தலைவர் அய்யம்மாள் துவக்கி வைத்தார்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us