/உள்ளூர் செய்திகள்/தேனி/ சாரல் மழை, பலத்த காற்றால் வயலில் சாய்ந்த நெல் பயிர் சாரல் மழை, பலத்த காற்றால் வயலில் சாய்ந்த நெல் பயிர்
சாரல் மழை, பலத்த காற்றால் வயலில் சாய்ந்த நெல் பயிர்
சாரல் மழை, பலத்த காற்றால் வயலில் சாய்ந்த நெல் பயிர்
சாரல் மழை, பலத்த காற்றால் வயலில் சாய்ந்த நெல் பயிர்
ADDED : ஆக 01, 2024 05:46 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் வீசும் பலத்த காற்று, சாரல் மழையால் குன்னூர் அருகே வயலில் நெல் பயிர் சாய்ந்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பெய்த மழையால் இறவை பாசன நிலங்களில் நீர் இருப்பை பயன்படுத்தி கோடையில் விவசாயிகள் குன்னூர், அம்மச்சியாபுரம் பகுதியில் பல ஏக்கரில் நெல் நடவு செய்தனர்.
கதிர்களுடன் வளர்ந்து நிற்கும் நெல் பயிர் இன்னும் சில வாரங்களில் அறுவடைக்கு தயாராகி விடும். இந்நிலையில் ஆண்டிபட்டி பகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் சாரல் மழை அடுத்தடுத்து பெய்கிறது. பலத்த காற்று சாரல் மழையால் வளர்ந்த நெல் பயிர் வயலில் சாய்ந்துள்ளது.
நெல் பயிர் சாய்ந்ததால் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வேளாண் துறையினர் கூறியதாவது: ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வயலில் நெல் பயிர் சாய்ந்தால் ஈரத்தால் பாதிப்பு அதிகமாகும். தற்போது சாரல் மழை பெய்தாலும் சில நாட்களில் ஈரப்பதம் சரியாகிவிடும். சாய்ந்த நெல் கதிர்கள் அறுவடைக்கு முன்பு தானாக சரியாகிவிடும் என்றனர்.