/உள்ளூர் செய்திகள்/தேனி/ துாங்கிய பெண்ணிடம் தாலிச்செயின் பறிப்பு துாங்கிய பெண்ணிடம் தாலிச்செயின் பறிப்பு
துாங்கிய பெண்ணிடம் தாலிச்செயின் பறிப்பு
துாங்கிய பெண்ணிடம் தாலிச்செயின் பறிப்பு
துாங்கிய பெண்ணிடம் தாலிச்செயின் பறிப்பு
ADDED : ஜூன் 07, 2024 06:45 AM
தேவதானப்பட்டி: வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் ரூ.1.75 லட்சம் மதிப்பிலான தங்கத்தாலியை பறித்து சென்ற குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி ஊராட்சி நல்லகருப்பன்பட்டியைச் சேர்ந்தவர் முனிபாண்டியன் 32.
இவரது மனைவி பரிமளா 28. வீட்டில் தனது மகன்கள் முகேஷ் 9. மித்திரன் 7 மற்றும் தனது கணவருடன் தூங்கிக்கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணிக்கு இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் பரிமளா கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கதாலியை பறித்தார்.
பரிமளா கண் விழிப்பதற்குள் தப்பி ஓடினார். தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன் விசாரணை செய்து வருகிறார்.