/உள்ளூர் செய்திகள்/தேனி/ குமுளி மலைப்பாதையில் குவியும் பாலிதீன் கழிவுகள் குமுளி மலைப்பாதையில் குவியும் பாலிதீன் கழிவுகள்
குமுளி மலைப்பாதையில் குவியும் பாலிதீன் கழிவுகள்
குமுளி மலைப்பாதையில் குவியும் பாலிதீன் கழிவுகள்
குமுளி மலைப்பாதையில் குவியும் பாலிதீன் கழிவுகள்
ADDED : ஜூன் 07, 2024 06:45 AM
கூடலுார்: லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதை தமிழக வனப்பகுதியில் அமைந்துள்ளது. தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இருப்பதால் வாகன போக்குவரத்து அதிகம்.
இப்பகுதியில் மான்கள், காட்டுப்பன்றி, குரங்குகள் என அதிகமாக உள்ளன. கேரளாவில் இருந்து தினந்தோறும் பாலிதீன் கழிவுகளை தமிழக வனப் பகுதியில் வந்து கொட்டுவது அதிகரித்துள்ளது.
இது மட்டுமின்றி கேரளாவில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவதில் பல்வேறு கெடுபிடிகளால் அனைத்தும் குமுளி வனப்பகுதியில் வந்து கொட்டுவதும் தொடர்ந்துள்ளது.
அடிக்கடி நடக்கும் இச்சம்பவத்தை தமிழக வனத்துறையினரும் கண்டு கொள்வதில்லை.
குறிப்பாக கொண்டை ஊசி வளைவு, பழைய போலீஸ் சோதனைச் சாவடி, இரைச்சல் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பாலிதீன் கழிவுகள் அதிகமாகவே உள்ளது. குரங்குகள், மான்கள் என பாலிதீன் கழிவுகளை உட்கொண்டு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.