ADDED : ஜூலை 25, 2024 05:01 AM

மூணாறு: மூணாறு அருகே மாங்குளம் விரிபாறை பகுதியில் ஜூலை 21 இரவில் பூட்டியிருந்த மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் பணம் திருடப்பட்டது. மூணாறு போலீசில் கடை உரிமையாளர் புகார் அளித்தார். இந்த வழக்கில் மாங்குளம் முனிபாறையைச் சேர்ந்த சோமனை 60,
மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் கைது செய்தனர். இவர் திருட்டு உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என போலீசார் தெரிவித்தனர்.