நீச்சல் போட்டி: தேனி வீரர்கள் சாதனை
நீச்சல் போட்டி: தேனி வீரர்கள் சாதனை
நீச்சல் போட்டி: தேனி வீரர்கள் சாதனை
ADDED : ஜூன் 26, 2024 07:54 AM

தேனி: விருதுநகர் மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான துடுப்பு நீச்சல் போட்டியில் தேனி வீரர்கள் தலா 4 தங்கம், வெள்ளி, 7 வெண்கலம் வென்றனர்.
மாநில அளவிலான துடுப்பு நீச்சல் போட்டி விருதுநகர் ஆர்.ஜே., மந்த்ரா மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 200 வீரர்கள் பங்கேற்றனர். இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் சினேகன் தலா ஒரு தங்கம், வெள்ளி, அத்வைத் 3 வெண்கலம், ரெனிஷ்கர் தலா ஒரு தங்கம், வெண்கலம், நிஹாரிக்கா தலா ஒரு தங்கம், வெண்கலம், 2 வெள்ளி, நிஹாசினி தலா ஒரு தங்கம், வெள்ளி, 2 வெண்கலம் வென்றனர். வெற்றி பெற்ற வீரர்களை தேனி மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார், துடுப்பு நீச்சல் சங்க தேனி மாவட்ட தலைவர் ஹரிசங்கர், விருதுநகர் மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பாராட்டினர். வெற்றி பெற்ற மாணவர்கள் ஆகஸ்டில் புனேவில் நடக்க உள்ள தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர்.