/உள்ளூர் செய்திகள்/தேனி/ பாதாளசாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஓடுவதை தடுக்க புதிய திட்டத்திற்கு 'சர்வே' பாதாளசாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஓடுவதை தடுக்க புதிய திட்டத்திற்கு 'சர்வே'
பாதாளசாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஓடுவதை தடுக்க புதிய திட்டத்திற்கு 'சர்வே'
பாதாளசாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஓடுவதை தடுக்க புதிய திட்டத்திற்கு 'சர்வே'
பாதாளசாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஓடுவதை தடுக்க புதிய திட்டத்திற்கு 'சர்வே'
ADDED : ஜூன் 08, 2024 05:48 AM

பெரியகுளம் : பெரியகுளம் பாதாளச்சாக்கடை கழிவுநீர் ரோட்டில் செல்லாமல், சீராக செல்ல புதிதாக இரும்பு குழாய் அமைப்பது குறித்து சர்வே செய்யும் பணி துவங்கியது.
பெரியகுளம் நகராட்சி நூற்றாண்டு கடந்த பழமையான நகராட்சி. 50 ஆண்டுகளுக்கு முன்பு பாதாளச்சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. கழிவுநீர் மயானக்கரை ரோடு கழிவுநீர் உந்து நிலையத்தில் சேகரிக்கப்பட்டு, பம்பிங் செய்து எ.புதுக்கோட்டை அருகே பாதாளச்சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து புல்பண்ணைக்கு அனுப்பப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பாதாளச்சாக்கடை அபிவிருத்தி பணிகள் நடந்தது.
தற்போது மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும், வணிக நிறுவனங்கள் அதிகரித்துள்ளது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முன்பு அமைக்கப்பட்ட சிறிய அளவிலான மண் குழாய்கள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட குழாய் இணைப்புகளிலும் கழிவுநீர் செல்கிறது. கழிவுநீர் வேகத்திற்கு சிறிய குழாய்கள் தாக்குபிடிக்காமல்
மேன்ஹோல் மூடிக்கு மேலே கழிவுநீர் வெளியேறி வராகநதியில் கழிவுநீர் கலக்கிறது.
இதனால் சில வாரங்களுக்கு முன்பு சுதந்திர வீதி மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
சர்வே பணி துவங்கியது: நகராட்சியில் 30 வார்டுகளில் பாதாளச்சாக்கடை கழிவுநீர் சீராக செல்வதற்கு இரும்பு குழாய் அமைத்து பணி துவங்குவதற்கு சர்வே பணி சுதந்திர வீதி, மில்லர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் துவங்கியது. நகராட்சி தலைவர் சுமிதா, கவுன்சிலர்கள், பணி மேற்பார்வையாளர் கணேசன், பணியாளர்கள் சர்வே செய்து திட்ட மதிப்பீடு செய்து வருகின்றனர்.