Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ வருமான வரி செலுத்துவோருக்கு விழிப்புணர்வு கூட்டம்; ஜூன் 11ல் நடக்கிறது ஜூன் 14ல் ஓட்டலில் நடக்கிறது

வருமான வரி செலுத்துவோருக்கு விழிப்புணர்வு கூட்டம்; ஜூன் 11ல் நடக்கிறது ஜூன் 14ல் ஓட்டலில் நடக்கிறது

வருமான வரி செலுத்துவோருக்கு விழிப்புணர்வு கூட்டம்; ஜூன் 11ல் நடக்கிறது ஜூன் 14ல் ஓட்டலில் நடக்கிறது

வருமான வரி செலுத்துவோருக்கு விழிப்புணர்வு கூட்டம்; ஜூன் 11ல் நடக்கிறது ஜூன் 14ல் ஓட்டலில் நடக்கிறது

ADDED : ஜூன் 08, 2024 05:48 AM


Google News
தேனி : தேனியில் முன் கூட்டியே வருமானவரி செலுத்துபவர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் ஜூன் 11, மாலை 4:00 மணி அளவில் நடக்க உள்ளது என, தேனி வருமானவரித்துறை அலுவலர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: விழிப்புணர்வுக் கூட்டத்தில் மதுரை வருமான வரித்துறை உதவி ஆணையர் அம்பேத்கர் பேசுகிறார். கூட்டத்தில் தொழில் நிறுவனத்தினர், வருமான வரி செலுத்துவோர் பங்கேற்க உள்ளனர்.

வருமான வரி செலுத்துவதற்கு மத்திய நேரடி வரி வாரியம் மேற்கொண்டுள்ள புதிய முயற்சிகள் குறித்து தெரிவிக்கப்பட உள்ளது.

மேலும் டிஜிட்டல் முறையில் வரி செலுத்துபவர்களின் கடமைகள், வரி செலுத்துவதில் உள்ள சிரமங்கள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

எனவே தேனி, ஆண்டிபட்டி, சின்னமனுார், கம்பம், பெரியகுளம், போடி ஆகிய பகுதிகளை சேர்ந்த தொழில் நிறுவனத்தினர் வருமான வரி செலுத்துவோர் இக்கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம்.

இவ்வாறு தெரிவித்திருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us