/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தெரு நாய்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தெரு நாய்கள்
ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தெரு நாய்கள்
ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தெரு நாய்கள்
ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தெரு நாய்கள்
ADDED : ஜூலை 14, 2024 03:58 AM

மூணாறு : முன்னெச்சரிக்கை விடுத்த ஊராட்சி அலுவலகத்தை தெருநாய்கள் முற்றுகையிட்டு உறங்கின.
மூணாறு அருகே குண்டளை சான்டோஸ் மலைவாழ் மக்கள் வசிக்கும் நகரில் வளர்ப்பு நாய் கடித்து ரேபிஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளான பெண் இரு வாரங்களுக்கு இறந்தார்.
அதனை சுட்டிக் காட்டி சுற்றுலா நகரான மூணாறில் தெரு நாய்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோருக்கு கடந்த வாரம் ஊராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் வெளியிட்டது. நகரில் தெருநாய்கள் ஏராளம் சுற்றித் திரிகின்றபோதும் அவற்றை கட்டுப்படுத்துவதில் சட்ட சிக்கல்கள் உள்ளதால் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து முற்றுகையிடுவது போன்று தெருநாய்கள் 'எங்களை ஒன்றும் செய்ய இயலாது' என்பதை உணர்த்தும் வகையில் ஊராட்சி அலுவலகம் முன்பு குவிந்தன. அவற்றை யாரும் விரட்டாததால் எவ்வித தொந்தரவு இன்றி வெகு நேரம் நன்கு உறங்கி ஓய்வு எடுத்த பிறகு மொத்தமாக கலைந்து சென்றன. தெருநாய்களிடம் இருந்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோரை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.