Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ இ ஆக்சன் மையங்களில் வியாபாரிகள் ஏலக்காய் பதிவு செய்ய அனுமதி ஸ்பைசஸ் வாரியம் உத்தரவு

இ ஆக்சன் மையங்களில் வியாபாரிகள் ஏலக்காய் பதிவு செய்ய அனுமதி ஸ்பைசஸ் வாரியம் உத்தரவு

இ ஆக்சன் மையங்களில் வியாபாரிகள் ஏலக்காய் பதிவு செய்ய அனுமதி ஸ்பைசஸ் வாரியம் உத்தரவு

இ ஆக்சன் மையங்களில் வியாபாரிகள் ஏலக்காய் பதிவு செய்ய அனுமதி ஸ்பைசஸ் வாரியம் உத்தரவு

ADDED : ஜூன் 02, 2024 04:06 AM


Google News
கம்பம்: ஏலக்காய் இ ஆக்சன் மையங்களில் வாரியத்திடம் லைசென்ஸ் பெற்ற வியாபாரிகளும் காய்களை பதியலாம். அது 25 சதவீதத்திற்கு மிகாமல் பதிய அனுமதிக்கப்படும் என்றும் கேரள ஐகோர்ட் உத்தரவை மேற்கோள் காட்டி ஸ்பைசஸ் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் ஏலக்காய் சாகுபடி கேரளா, தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் அதிகமாக நடைபெறுகிறது. இந்திய உற்பத்தியில் 80 சதவீதத்தை கேரளா பகிர்ந்து கொள்கிறது. இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் ஏக்கரில் சாகுபடியாகிறது. வயநாடு மாவட்டத்தில் கணிசமான பரப்பில் சாகுபடியாகிறது.

ஏலக்காய் விற்பனையில் ஸ்பைசஸ் வாரியத்தின் லைசென்ஸ் பெற்ற ஆக்சன் கம்பெனிகளில் பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும். இதற்கென போடி, புத்தடியில் இ ஆக்சன் மையங்கள் உள்ளன. வாரத்தில் ஆறு நாட்கள் காலை, மாலை என இரண்டு நிறுவனங்கள் தினமும் ஏலம் நடத்தும். தற்போது 16 நிறுவனங்கள் ஏலம் நடத்துகின்றன.

இ ஆக்சன் சென்டர்களின் விவசாயிகளின் காய்களை ஏல நிறுவனங்கள் விற்பனைக்கு பதிவு செய்யும். அதே சமயம் வியாபாரிகளும் விற்பனைக்கென காய்களை பதிவு செய்கின்றனர்.

இது தொடர்பாக வண்டன் மேடு கார்டமம் குரோவர்ஸ் அசோசியேசன் சார்பில் கேரள ஐகோர்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஏலக்காய் சாகுபடி செய்யும் விவசாயிகள் மட்டுமே இ ஆக்சன் சென்டர்களில் பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும். வியாபாரிகள் பதிவு செய்வது தவறு. எனவே இனிமேல் வியாபாரிகள் இ ஆக்சன் மையங்களில் ஏலக்காய் பதிவு செய்து விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. விவசாயிகளின் காய் மட்டுமே பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது .

இந்நிலையில் மே 31ல் ஸ்பைசஸ் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், ஐகோர்ட்டின் சமீபத்திய உத்தரவுப் படி ஒவ்வொரு ஆக்சனிலும் ஸ்பைசஸ் வாரியத்தின் அனுமதி பெற்ற வியாபாரிகள் , அந்த ஆக் ஷனில் பதிவாகும் மொத்த காய் அளவில் 25 சதவீதத்திற்கு மிகாமல் பதிவு செய்து கொள்ளலாம்.

இது கடந்த 2022 மார்ச் 8 ம் தேதி வாரியம் அனுமதித்த 25 ஆயிரம் டன் என்பதை திருத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.'' என அதில் கூறியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us