/உள்ளூர் செய்திகள்/தேனி/ மைக்ரோ மின் நிலைய ஷட்டரை இறக்க மறுப்பதால் விவசாயிகள் தவிப்பு: 1600 ஏக்கரில் நாற்றுக்கள் வளர்க்க முடியாமல் சிரமம் மைக்ரோ மின் நிலைய ஷட்டரை இறக்க மறுப்பதால் விவசாயிகள் தவிப்பு: 1600 ஏக்கரில் நாற்றுக்கள் வளர்க்க முடியாமல் சிரமம்
மைக்ரோ மின் நிலைய ஷட்டரை இறக்க மறுப்பதால் விவசாயிகள் தவிப்பு: 1600 ஏக்கரில் நாற்றுக்கள் வளர்க்க முடியாமல் சிரமம்
மைக்ரோ மின் நிலைய ஷட்டரை இறக்க மறுப்பதால் விவசாயிகள் தவிப்பு: 1600 ஏக்கரில் நாற்றுக்கள் வளர்க்க முடியாமல் சிரமம்
மைக்ரோ மின் நிலைய ஷட்டரை இறக்க மறுப்பதால் விவசாயிகள் தவிப்பு: 1600 ஏக்கரில் நாற்றுக்கள் வளர்க்க முடியாமல் சிரமம்
ADDED : ஜூன் 02, 2024 04:06 AM
கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. முல்லைப் பெரியாறு அணை பாசனத்தில் முதல் போக நெல் சாகுபடிக்கு நேற்று காலை விவசாயத்திற்கென 200 கன அடியும், குடிநீருக்கென 100 கன அடியும் என 300 கன அடி திறக்கப்பட்டுள்ளது.
ஜூன் முதல் தேதி தண்ணீர் திறப்பை எதிர்நோக்கி விவசாயிகள் வயல்களில் நெல்நாற்று வளர்க்க , நிலத்தை உழுது பண்படுத்தி தயார் நிலையில் வைத்துள்ளனர்.
நாற்று வளர்க்க விதை நெல்லுக்கு தண்ணீர் வேண்டும். அணையிலிருந்து தண்ணீரும் திறந்து விட்டுள்ளனர்.
குள்ளப்பகவுண்டன்பட்டி முல்லையாற்றங்கரையில் 4 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மைக்ரோ மின் நிலையம் உள்ளது. இந்த மின் நிலையம் அமைத்துள்ள தடுப்பணை ஷட்டரை இறக்கினால் தான், கம்பம் சின்ன வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் வரும். கடந்த ஒரு வாரமாக கம்பம் விவசாயிகள் சங்க செயலாளர் சுகுமாறன், நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன் ஆகியோர் , மின்நிலைய உதவி பொறியாளரிடம், ஷட்டரை இறக்க கோரி வருகின்றனர்.
ஆனால் இதுவரை தடுப்பணை ஷட்டர் இறக்கவில்லை. இதனால் 1600 ஏக்கரில் நாற்றுகள் வளர்க்கும் பணியை துவக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் சங்க செயலாளர் சுகுமாறன் கூறுகையில், ஆண்டுதோறும் ஷட்டர் இறக்கும் பிரச்னை பெரும் தலைவலியாக உள்ளது. ஷட்டரை இறக்கினால் தான் விவசாய பணிகளை செய்ய முடியும்.
மைக்ரோ மின் நிலைய உதவி பொறியாளரிடம் கூறினால், செயற்பொறியாளரிடம் கூறுங்கள் என அலைகலைப்பு செய்து வருகின்றனர்.
இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறந்தும் 1600 ஏக்கரில் நாற்றுகள் வளர்க்க முடியாத நிலை உள்ளது. இனி நாங்கள் போராட்டத்தில் இறங்கினால் தான் விடிவு கிடைக்கும் என்ற நிலை எழுந்து வருகிறது என்றார்.