/உள்ளூர் செய்திகள்/தேனி/ போலி நிலப்பட்டா வழங்கிய அதிகாரிகள் குறித்து விசாரிக்க சிறப்பு குழு போலி நிலப்பட்டா வழங்கிய அதிகாரிகள் குறித்து விசாரிக்க சிறப்பு குழு
போலி நிலப்பட்டா வழங்கிய அதிகாரிகள் குறித்து விசாரிக்க சிறப்பு குழு
போலி நிலப்பட்டா வழங்கிய அதிகாரிகள் குறித்து விசாரிக்க சிறப்பு குழு
போலி நிலப்பட்டா வழங்கிய அதிகாரிகள் குறித்து விசாரிக்க சிறப்பு குழு
ADDED : ஜூலை 05, 2024 05:41 AM

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் போலி நிலப்பட்டாக்கள் வழங்கிய அதிகாரிகள் பங்கு குறித்து விசாரிக்க ஐ.ஜி., சேதுராமன் தலைமையில் சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்தது.
இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உள்பட பல்வேறு பகுதிகளில் வருவாய் துறை அதிகாரிகள் விதிமுறைகள் மீறி நிலப்பட்டாக்கள் வழங்கியதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக சில அதிகாரிகள் மீது கூட்டு சதி என வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனால் சம்பந்தப்பட்டவர்கள் எளிதில் தப்பிக்க வாய்ப்புள்ளதால், மூணாறில் ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கேரள உயர்நீதி மன்ற நீதிபதிகள் முகம்மது முஸ்தாக், மனு ஆகியோர் கொண்ட அமர்வு அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு குழுவை அமைக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி ஐ.ஜி., சேதுராமன் தலைமையில் இடுக்கி முன்னாள் கலெக்டரும், சமூகநலத்துறை இயக்குனருமான தினேசன், இடுக்கி போதை பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. பயஸ்ஜார்ஜ் ஆகியோர் கொண்ட குழுவை நியமித்ததாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மூணாறைச் சேர்ந்த ஐ.ஜி. சேதுராமன் தமிழர். அவரது பெற்றோர் பெரியவாரை எஸ்டேட் சோலைமலை டிவிஷனில் தொழிலாளர்களாக பணியாற்றினர்.
இடுக்கி மாவட்டத்தை குறித்து நன்கு அறிந்தவர் என்பதுடன் நேர்மையான அதிகாரி என்பதால் விசாரணை முறையாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.