/உள்ளூர் செய்திகள்/தேனி/ சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
ADDED : ஜூன் 26, 2024 07:48 AM
மூணாறு : இடுக்கி மாவட்டம் ராஜாக்காடு அருகே பழைய விடுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சாபுவிற்கு 55, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அப்பகுதியில் பெற்றோர் நடத்தும் கடையில் 2023ல் சிறுமி தனியாக இருந்தார். அப்போது கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சிறை தண்டனை பெற்ற சாபு 55, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தார்.
ராஜாக்காடு போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த வழக்கு தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஸ்மிசூ கே. தாஸ் ஆஜரானார். விசாரணை முடிந்து நேற்று நீதிபதி ஜான்சன், குற்றவாளி சாபுக்கு மூன்று ஆண்டுகள் சிறை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் தீர்ப்பில் அபாராத தொகையை சிறுமிக்கு வழங்க வேண்டும். அத்தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.