Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாநில அரசுகளை பல முறை கலைத்தது காங்., தான்: பா.ஜ., பெருங்கோட்ட பொறுப்பாளர் பேட்டி

மாநில அரசுகளை பல முறை கலைத்தது காங்., தான்: பா.ஜ., பெருங்கோட்ட பொறுப்பாளர் பேட்டி

மாநில அரசுகளை பல முறை கலைத்தது காங்., தான்: பா.ஜ., பெருங்கோட்ட பொறுப்பாளர் பேட்டி

மாநில அரசுகளை பல முறை கலைத்தது காங்., தான்: பா.ஜ., பெருங்கோட்ட பொறுப்பாளர் பேட்டி

ADDED : ஜூன் 26, 2024 07:49 AM


Google News
Latest Tamil News
தேனி : காங்கிரஸ் கட்சிதான் சிறப்பு சட்டப்பிரிவு 356 ஐ பயன்படுத்தி பலமுறை மாநில அரசுகளை கலைத்துள்ளது.' என, தேனியில் பா.ஜ., மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: இந்திரா காந்தி 1975 ஜூன் 25ல் அவசர கால நிலையை பிரகடனப்படுத்தினார். அது இந்தியாவின் கருப்பு நாள் ஆகும். இதற்கு முன் சீனா, பாகிஸ்தான் உடன் போர் ஏற்பட்ட போது இரு முறை அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவசியம் இன்றி இந்திரா காந்தி அவசர நிலையை அறிவித்தார். விலை வாசி உயர்வு உள்ளிட்டவற்றால் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலகாபாத் நீதிமன்றம் அவர் வெற்றி செல்லாது என அறிவித்தது. இந்நிலையில் அவசர நிலையை அறிவித்தார். இதனால் பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கருத்துரிமை, பேச்சுரிமைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி எதிர்த்தார், இந்திரா காந்தியை பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தினார். இரு ஆண்டுகள் அவசர நிலை நீடித்தது. பின் 1977 ல் லோக்சபா தேர்தல் நடந்தது.

இதில் இந்திரா வீழ்ந்தார். காங்., இல்லாத மொராஜிதேசாய் தலைமையிலான ஆட்சி உருவானது.

நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்கள் இன்று போலி பிம்பம் உருவாக்குகின்றனர். வாஜ்பாய், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு மாநில அரசுகளை கலைக்கவில்லை.

ஆனால் காங்., 100க்கும் மேற்பட்ட முறை மாநிலங்களில் ஆட்சியை கலைத்துள்ளது. அதிக முறை சட்டங்களை திருத்தியதும் காங்., தான். தற்போது காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. மோடி பதவி ஏற்கும் போதெல்லாம் அரசியல் சாசனத்தை வணங்குகிறார்.

அவசரநிலை பிரகடனத்தை கொண்டு வந்த காங்., உடன் தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது கண்டணத்திற்கு உரியது. அவர்கள் பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை என்பது கேலிக்கூத்தானது. அரசியலமைப்பு கருப்பு தினத்தில் பலர் பதவி ஏற்கின்றனர்.

ராகுல் அரசியலமைப்புப் படி செயல்படுவேன் என்கிறார். அதை அவமதித்தவர்கள் இன்று மதிப்பேன் என்கின்றனர்., என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us