/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேக்கடி ஷட்டர் அருகே கால்வாயில் கலக்கும் கழிவுநீர் தேக்கடி ஷட்டர் அருகே கால்வாயில் கலக்கும் கழிவுநீர்
தேக்கடி ஷட்டர் அருகே கால்வாயில் கலக்கும் கழிவுநீர்
தேக்கடி ஷட்டர் அருகே கால்வாயில் கலக்கும் கழிவுநீர்
தேக்கடி ஷட்டர் அருகே கால்வாயில் கலக்கும் கழிவுநீர்
ADDED : ஜூன் 25, 2024 12:12 AM

கூடலுார் : தேக்கடி ஷட்டர் அருகே கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் தமிழகப் பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குடிநீர் மற்றும் நெல் சாகுபடிக்கு தேக்கடி ஷட்டர் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.
இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் லோயர்கேம்பில் மின் உற்பத்தி செய்த பின் கூடலுார், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி வழியாக வைகை அணையில் சேருகிறது. நெல் சாகுபடிக்கு மட்டுமின்றி பல லட்சம் மக்கள் குடிநீராக பயன்படுத்துகின்றனர்.
தேக்கடி ஏரியிலிருந்து ஷட்டர் வரை ஒன்றரை கி.மீ., தூரம் திறவை வாய்க்கால் உள்ளது. குமுளி, தேக்கடியில் உள்ள ஏராளமான குடியிருப்புகள், ஓட்டல்கள், லாட்ஜ்களில் இருந்தும் வெளியேறும் கழிவு நீர் இக்கால்வாயில் கலக்கிறது. தினந்தோறும் 93 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் கலப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கழிவுநீருடன் கலந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீர் வெளியேறுவதால் குடிநீராக பயன்படுத்தும் மக்கள் பாதிக்கப்படும் அவலம் உள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இடுக்கி மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கழிவு நீர் கலப்பதை தடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதனால்தமிழகப் பகுதியில் உள்ள நீர்வளத் துறையினரும், சுகாதாரத் துறையினரும் இணைந்து தேக்கடி ஷட்டர் அருகே ஆய்வு மேற்கொண்டு கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.