/உள்ளூர் செய்திகள்/தேனி/ குறைந்த மின்னழுத்த சப்ளையால் டி.வி., மின் விசிறி பழுதாகும் அவலம் சங்கராபுரம் ஊராட்சி இருளில் மூழ்கும் அவலம் குறைந்த மின்னழுத்த சப்ளையால் டி.வி., மின் விசிறி பழுதாகும் அவலம் சங்கராபுரம் ஊராட்சி இருளில் மூழ்கும் அவலம்
குறைந்த மின்னழுத்த சப்ளையால் டி.வி., மின் விசிறி பழுதாகும் அவலம் சங்கராபுரம் ஊராட்சி இருளில் மூழ்கும் அவலம்
குறைந்த மின்னழுத்த சப்ளையால் டி.வி., மின் விசிறி பழுதாகும் அவலம் சங்கராபுரம் ஊராட்சி இருளில் மூழ்கும் அவலம்
குறைந்த மின்னழுத்த சப்ளையால் டி.வி., மின் விசிறி பழுதாகும் அவலம் சங்கராபுரம் ஊராட்சி இருளில் மூழ்கும் அவலம்

குண்டும், குழியுமான ரோடு
மணிகண்டன்: 2வது வார்டு கீழப்பட்டி மேற்கு தெருவில் ரோடு அமைத்து 20 ஆண்டுகளுக்கு மேலானதால் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் டூவீலர் தவிர மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். சாக்கடை வசதி இன்றி கழிவு நீர் சீராக செல்ல முடியாமல் தேங்குகிறது.
கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேடு
கணேசன்: 2, 3வது வார்டு பகுதியில் மின் டிரான்ஸ்பார்மர், மின் கம்பிகள், மின்கம்பங்கள் அமைத்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் இப்பகுதியில் குறைந்த அழுத்த மின் சப்ளையால் இரவில் சில வீடுகள் தவிர மற்ற வீடுகளில் விளக்குகள் எரியாமல் இருளில் தவிக்கிறோம்.
சீரான மின் சப்ளை தேவை
பரிமளா: குறைந்த மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் மிக்சி, கிரைண்டர் டி.வி., பயன்படுத்த முடியாமல் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. மிக்சி, கிரைண்டர் பழுது ஏற்படுவதால் வீடுகளில் சட்னி, மாவு அரைக்கவும், உணவுகள் சமைக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றோம். மின்சப்ளையை சீரமைப்பதோடு, சாக்கடை, ரோடு, பாலம், தடுப்புச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
ஊராட்சியில் தீர்மானம்
ஜி.ஜெயலட்சுமி, தலைவர்: குறைந்த மின் அழுத்த மின் சப்ளையை சரி செய்யும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மர், மின் கம்பிகளை மாற்றியமைக்க அமைத்து தர மின்வாரிய அதிகாரிகளுக்கு ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி உள்ளோம்.