/உள்ளூர் செய்திகள்/தேனி/ பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு பணி பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு பணி
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு பணி
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு பணி
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு பணி
ADDED : ஜூலை 19, 2024 06:29 AM
தேனி : மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக்குழு ஆக.,ல் மறுகட்டமைப்பு பணி நடக்கிறது.
தேனி மாவட்டத்தில் 325 தொடக்கப்பள்ளிகள், 99 நடுநிலைப்பள்ளிகள், 36 உயர்நிலைப்பள்ளிகள், 70 மேல்நிலைப்பள்ளிகள் என 530 அரசுப் பள்ளிகள் உள்ளன. அனைத்துப்பள்ளியிலும் பள்ளி மேலாண்மை குழு செயல்படுகிறது. இக் குழு பள்ளி நலன் சார்ந்த முடிவுகள் எடுக்கின்றன. குழுவில் பள்ளி தலைமை ஆசிரியர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி, மாணவர்களின் பெற்றோர், முன்னாள் மாணவர்கள் என 24 பேர் இருப்பர். இக்குழு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது. தற்போது உள்ள குழுவின் செயல்பாட்டு காலம் நிறைவடைந்தது. தற்போது புதிய குழு அமைக்கம் பணி துவங்க உள்ளது. அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆக.,10,17, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆக.,24, நடுநிலைப்பள்ளிகளில் ஆக.,31ல் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்ப பணிகள் நடக்கின்றன.