/உள்ளூர் செய்திகள்/தேனி/ கஞ்சா, திருட்டு, வழிப்பறி வழக்கு உள்ளவர்கள் தொடர் கண்காணிப்பு எஸ்.பி., சிவபிரசாத் எச்சரிக்கை கஞ்சா, திருட்டு, வழிப்பறி வழக்கு உள்ளவர்கள் தொடர் கண்காணிப்பு எஸ்.பி., சிவபிரசாத் எச்சரிக்கை
கஞ்சா, திருட்டு, வழிப்பறி வழக்கு உள்ளவர்கள் தொடர் கண்காணிப்பு எஸ்.பி., சிவபிரசாத் எச்சரிக்கை
கஞ்சா, திருட்டு, வழிப்பறி வழக்கு உள்ளவர்கள் தொடர் கண்காணிப்பு எஸ்.பி., சிவபிரசாத் எச்சரிக்கை
கஞ்சா, திருட்டு, வழிப்பறி வழக்கு உள்ளவர்கள் தொடர் கண்காணிப்பு எஸ்.பி., சிவபிரசாத் எச்சரிக்கை
ADDED : ஜூன் 26, 2024 07:50 AM
தேனி : 'மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்போர், கஞ்சா, திருட்டு, வழிப்பறி வழக்குகளில் உள்ளவர்களிடம் தொடர்பு உள்ளவர்கள் கண்காணிக்க பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.' என, எஸ்.பி., சிவபிரசாத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்போர் பற்றி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு காவல் கண்காணிப்பு கூட்டத்திலும் மொத்தமாக மது விற்பனை செய்வோர் பற்றி கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 104 பேர் பட்டியலில் உள்ளனர். இதுவரை கஞ்சா விற்பனை வழக்கு திருட்டு, வழிப்பறி வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் தொடர்பு குறித்து கண்காணிக்கப்படுகிறது.
அவர்கள் வீடுகளிலும் சோதனை செய்யும் பணி தீவிர படுத்தப்பட்டு உள்ளது. தேவதானப்பட்டி புல்லக்கா பட்டி தங்க பாண்டியணிடம் 70 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் தேவதானப்பட்டி டாஸ்மாக் கடையில் மது வாங்கியதாக தெரிவித்தார்.
சில்லறை மது விற்பனைக்கு டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் வேல்முருகன், விற்பனையாளர் செல்வக்குமார் காளியப்பன் உடந்தையாக இருந்துள்ளனர்.
விதி மீறி மொத்தமாக விற்பனை செய்த மூவர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மொத்த விற்பனை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.