/உள்ளூர் செய்திகள்/தேனி/ கள்ளச்சாராய ஊரல் அமைப்போர் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவு கள்ளச்சாராய ஊரல் அமைப்போர் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவு
கள்ளச்சாராய ஊரல் அமைப்போர் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவு
கள்ளச்சாராய ஊரல் அமைப்போர் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவு
கள்ளச்சாராய ஊரல் அமைப்போர் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவு
ADDED : ஜூன் 21, 2024 04:50 AM
தேனி: மாவட்டத்தில் டி.எஸ்.பி.,க்கள் மேற்பார்வையில் கள்ளச்சாராய ஊரல், சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்க குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
எஸ்.பி., அலுவலகத்தில் மது, போதைப் பொருட்கள், கள்ளச்சாராய விற்பனை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில் நடந்தது. ஏ.டி.எஸ்.பி.,கள் விவேகானந்தன், சுகுமாறன் முன்னிலை வகித்தனர். முன்னதாக மது, புகையிலை, கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை குறித்து பொது மக்கள் 93440 14104 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் எஸ்.பி., பேசுகையில், 'மாவட்டத்தில் மது, போதை பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவை சட்ட விரோதமாக விற்பனை தடுக்க தனிப்படை அமைத்து ரோந்துப்பணி தீவிரப்படுத்த வேண்டும். கள்ளச்சாராய ஊரல் அமைக்கும் குற்றவாளிகளை பிடிப்பதில் டி.எஸ்.பி.,க்கள் முனைப்புடன் இருக்க வேண்டும். உடனடியாக குற்றவாளிகளை பிடித்து, நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் இதற்கு முன் ஊரல் அமைத்து கள்ளச்சாராய விற்றவர்களின் பட்டியலை எடுத்து அதன்படி ரோந்துப் பணி தீவிரப்படுத்த வேண்டும்' என்றார். மாவட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள், ஊரல் அமைப்பவர்கள் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.