ADDED : ஜூன் 21, 2024 04:51 AM
தேனி: தேனி லட்சுமிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் தேனி வழக்கறிஞர் சங்கம் சார்பில், வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ள மாற்றம் செய்யப்பட்ட இந்திய தண்டனை சட்ட நடைமுறைப்படுத்துவதை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சங்க தென் மண்டல செயலாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.
சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிக்க உள்ளனர்.