/உள்ளூர் செய்திகள்/தேனி/ நகராட்சி அலுவலகம் முன் துாய்மை பணியாளர்கள் தர்ணா நகராட்சி அலுவலகம் முன் துாய்மை பணியாளர்கள் தர்ணா
நகராட்சி அலுவலகம் முன் துாய்மை பணியாளர்கள் தர்ணா
நகராட்சி அலுவலகம் முன் துாய்மை பணியாளர்கள் தர்ணா
நகராட்சி அலுவலகம் முன் துாய்மை பணியாளர்கள் தர்ணா
ADDED : ஜூன் 14, 2024 05:42 AM

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலக நுழைவாயிலில் சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜெயபாண்டி தலைமையில், 'சம்பளம் மாதந்தோறும் 5ம் தேதிக்குள் வழங்கவும்,நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்கவும், தொழிலாளர்களிடம் பி.எப்., பிடித்தம் செய்யும் தொகையை அவர்கள் பி.எப்., கணக்கில் வரவு வைக்க வேண்டும்' என்ற கோரிக்கை வலியுறுத்தி, துாய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா செயலாளர் தர்மர், வனவேங்கை கட்சி மாநில பொதுசெயலாளர் உலகநாதன், மாவட்ட செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கமிஷனர் ஜஹாங்கீர்பாஷா தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.