/உள்ளூர் செய்திகள்/தேனி/ முல்லைப்பெரியாறு புதிய அணை கேரள அரசை கண்டித்து தீர்மானம் முல்லைப்பெரியாறு புதிய அணை கேரள அரசை கண்டித்து தீர்மானம்
முல்லைப்பெரியாறு புதிய அணை கேரள அரசை கண்டித்து தீர்மானம்
முல்லைப்பெரியாறு புதிய அணை கேரள அரசை கண்டித்து தீர்மானம்
முல்லைப்பெரியாறு புதிய அணை கேரள அரசை கண்டித்து தீர்மானம்
ADDED : ஜூன் 09, 2024 03:44 AM
உத்தமபாளையம், : முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டப் போவதாக கூறிக் கொண்டிருக்கும் கேரள அரசை கண்டித்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்க கூட்டத்தில் கண்டனதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் உத்தமபாளையத்தில் தலைவர் தர்வேஷ் முகைதீன் தலைமையில் நடந்தது.
துணை தலைவர் விஜயராசன் முன்னிலை வகித்தார்.செயலாளர் சகுபர் அலி வரவேற்றார்.
கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு, புதிய அணை கட்டப் போவதாக அறிவித்துள்ள கேரள அரசை கண்டித்தும், ஜூன் முதல் தேதி கம்பம் பள்ளத்தாக்கு முதல் போகத்திற்கு தண்ணீர் திறப்பு நிகழ்ச்சிக்கு நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகளை அழைக்காமல், தனக்கு வேண்டியவர்களை அழைத்து, மும்மத பிரார்த்தனை மேற்கொள்ளாமல் தண்ணீர் திறந்த பெரியாறு அணை செயற்பொறியாளரை கண்டித்தும், மோட்டார் வைத்து தண்ணீர் திருடுவதை தடுக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கம்பம் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணன், செயலாளர் சுகுமாறன், நீரினை பயன்படுத்துவோர் நிர்வாகிராமகிருஷ்ணன், சின்னமனூர் விவசாயிகள் சங்க தலைவர் ராஜா, சீலையம்பட்டி தலைவர்ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட அனைத்து ஊர்களின் சங்க நிர்வாகிகள்பங்கேற்றனர்.