Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ 'ஆன்லைன்' மோசடி குறித்து அகமதாபாத்தில் விசாரணை

'ஆன்லைன்' மோசடி குறித்து அகமதாபாத்தில் விசாரணை

'ஆன்லைன்' மோசடி குறித்து அகமதாபாத்தில் விசாரணை

'ஆன்லைன்' மோசடி குறித்து அகமதாபாத்தில் விசாரணை

ADDED : ஜூன் 09, 2024 03:43 AM


Google News
மூணாறு, : மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் 'ஆன் லைன்' மூலம் 16 பேரிடம் நடந்த பண மோசடி குறித்து அகமதாபாத் சென்று போலீசார் விசாரித்தனர்.

மூணாறு வட்டவடை ஊராட்சியில் காய்கறி சாகுபடி முக்கிய தொழிலாகும். அங்கு வெளிநாட்டு நிறுவனம் சார்பில் உற்பத்தி துவங்குவதாக கடந்தாண்டு தகவல் வந்தது. அந் நிறுவனத்தில் முதலீடு செய்தால் தினமும் லாபமாக ரூ.100 முதல் ரூ.500 வரை வருவாய் கிடைக்கும் என 'ஆன்லைன்' தகவலை நம்பி சிலர் முதலீடு செய்தனர். அதற்கு 'வாட்ஸ் ஆப்' குழு அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் முதலீடு செய்தவர்களுக்கு தினமும் லாபம் கிடைத்ததால் பலர் முதலீடு செய்தனர். நிறுவனத்தின் முதலாம் ஆண்டையொட்டி பல பொருட்கள் விலை குறைவில் வழங்குவதாக கூறி ரூ.32 ஆயிரம் மதிப்பிலான பொருளை ரூ.6000க்கு கொடுத்தனர். நிறுவனத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2.5 லட்சம் வரை 16 பேர் முதலீடு செய்தனர்.

அதன்பிறகு முதலீடு செய்தவர்களுக்கு லாபம் கிடைக்காததால் அலைபேசியில் தொடர்பு கொண்டபோது 'சுவிட்ச் ஆப்' ஆகியிருந்தது. 'வாட்ஸ் ஆப்' குழு கலைக்கப்பட்டதால் முதலீடு செய்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தேவிகுளம் போலீஸ், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.

தேவிகுளம் போலீசார் சைபர் கிரைம் உதவியுடன் விசாரித்தபோது குஜராத் அகமதாபாத்தில் இருந்து மோசடி நடந்தது தெரியவந்தது.

தேவிகுளம் எஸ்.ஐ. சந்தோஷ் தலைமையில் போலீசார் அகமதாபாத்தில் சம்பந்தப்பட்ட முகவரிக்குச் சென்றபோது கால்நடை தீவனம் விற்பனை செய்யும் கடையாக இருந்தது.

அங்கு இருந்து தான் ஆன் லைன் மோசடி நடந்ததாகவும், மோசடியில் ஈடுபட்டவர் இடத்தை காலி செய்ததாகவும் தெரிய வந்தது. அவர் சம்பந்தப்பட்ட கடையில் ஒப்பந்தமிட்டதை வைத்து மோசடி நபரை குறித்து சில முக்கிய தகவல்கள் கிடைத்ததால் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதே பாணியில் சம்பந்தப்பட்ட நபர் மஹாராஷ்டிரர, டில்லி, ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களில் கைவரிசை காட்டியதாகவும் தெரியவந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us