/உள்ளூர் செய்திகள்/தேனி/ நோயாளர் உதவியாளர் கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வர கோரிக்கை நோயாளர் உதவியாளர் கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வர கோரிக்கை
நோயாளர் உதவியாளர் கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வர கோரிக்கை
நோயாளர் உதவியாளர் கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வர கோரிக்கை
நோயாளர் உதவியாளர் கட்டடங்கள் பயன்பாட்டிற்கு வர கோரிக்கை
ADDED : ஜூன் 03, 2024 03:40 AM
கம்பம்: மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளர்களுடன் வருபவர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட கட்டடங்கள், கட்டி பல ஆண்டுகளை கடந்தும் பயன்படுத்தாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.
உடன் வருபவர்கள் தங்குவதற்கு என மத்திய மாநில அரசுகள் பங்குத் தொகையில் படுக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப நோயாளர் உடன் வருபவர்கள் தங்க புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன.
தேனி மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. கட்டடங்கள் கட்டி பல ஆண்டுகளை கடந்து திறந்தும், பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் அனைத்து இடங்களிலும் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் கட்டிய புதிய கட்டடம் பயன்படுத்த அனுமதிக்காமல் அப்படியே பூட்டி வைத்துள்ளனர்.
கம்பம் அரசு மருத்துவமனையிலும் புதிய கட்டடம் பயன்படுத்தப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடங்கள் செயல்படுவதில் என்ன பிரச்னை என்பது தெரியவில்லை. நோயாளர் உடன் வருபவர்கள் தங்கவில்லை என்றாலும், வேறு பயன்பாட்டிற்காவது பயன்படுத்த இணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.