/உள்ளூர் செய்திகள்/தேனி/ தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு
ADDED : ஜூலை 03, 2024 05:34 AM
தேனி : அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு நடந்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் 325 அரசு, 131 உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், 99 அரசு,65 உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில் 1:30 என்ற வகிதத்தில் ஆசிரியர் பணியிடம் ஒதுக்கப்படுகிறது. தற்போது மாணவர்கள் எண்ணிக்கையை விட 353 பேர் உபரி ஆசிரியர் பணியிடங்கள் என கண்டறியப்பட்டன. அரசு, உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை அரசு, கள்ளர்பள்ளிகளில் பணிநிரவல் செய்யும் பணி நடந்தது. மாவட்டத்தில் இதுவரை இடைநிலை ஆசிரியர்கள் 12 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேர் என 16 பேர் மாதிரி பள்ளிகள், கள்ளர் பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்யப்பட்டுள்ளனர்.
ஒன்றிய அளவிலான இடமாறுதலில் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் 9பேர், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 3 பேர் இடமாறுதலில் சென்றுள்ளனர். கலந்தாய்வு தொடர்ந்து நடக்கிறது.
கல்வித்துறையினர் கூறுகையில், உதவி பெறும் பள்ளிகளில் காலிப்பணியிடம் இருந்தால், அரசு அனுமதியுடன் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது உபரியாக உள்ள ஆசிரியர்களை கொண்டு நிரப்ப படும். தொடக்கப்பள்ளிகளில் இந்த முறையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடுவது முதல் முறை என தெரிவித்தனர்.