/உள்ளூர் செய்திகள்/தேனி/ 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிப்பு செயல் விளக்கம் 'ட்ரோன்' மூலம் மருந்து தெளிப்பு செயல் விளக்கம்
'ட்ரோன்' மூலம் மருந்து தெளிப்பு செயல் விளக்கம்
'ட்ரோன்' மூலம் மருந்து தெளிப்பு செயல் விளக்கம்
'ட்ரோன்' மூலம் மருந்து தெளிப்பு செயல் விளக்கம்
ADDED : ஜூலை 03, 2024 05:34 AM
போடி : போடி அருகே காமராஜபுரத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட அட்மா திட்டத்தின் கீழ் ஆளில்லா ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு பற்றிய செயல் விளக்கம் வேளாண் உதவி இயக்குனர் தெய்வேந்திரன் தலைமையில் நடந்தது.
வேளாண் அலுவலர் கார்த்திகா, பூச்சியியல் வல்லுநர் சபரிநாதன் முன்னிலை வகித்தனர்.
முகாமில் கரும்பு, வெங்காயம் பயிர்களில் ரசாயன உரம், பூச்சி கொல்லி மருந்துகள் குறைத்தல், ஒருங்கிணைந்த உர மேலாண்மை, ரசாயன உரங்கள் குறைவாக பயன்படுத்தும் முறை குறித்தும், பயிர்களில் தாக்கும் பூச்சிகள், அதற்கான ரசாயண மருந்துகள் தெளிப்பும், ஆளில்லா ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர்.
காமராஜபுரம், உப்புக்கோட்டை, பத்திரகாளிபுரம், கோடாங்கிபட்டி, விசுவாசபுரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள், அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.