ADDED : ஜூலை 14, 2024 04:04 AM
புகையிலை பதுக்கிய முதியவர் கைது
தேனி: உத்தமபாளையம் எஸ்.ஐ., இளங்கோவன் தலைமையில் காக்கில்சிக்கையன்பட்டி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது உத்தமபாளையம் 14வது வார்டு வடக்குத்தெரு முதியவர் பரமசிவம் 75, தனது பெட்டிக்கடையில் ரூ.388 மதிப்புள்ள புகையிலைப் பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்து, புகையிலை கைப்பற்றினர்.
இடையூறு செய்த பெண் கைது
தேனி: எம்.ஜி.ஆர்., நகர் தர்மன் மனைவி கல்யாணி 28. இவர் தேனி மதுரை மெயின் ரோடு தனியார் மருத்துவமனை அருகே, பொது மக்களுக்கு இடையூறாக தகாத வார்த்தைகளால் திட்டி பேசி இடையூறு ஏற்படுத்தினார். தேனி போலீசார் அவரை கைது செய்தனர்.
மது பதுக்கிய இருவர் கைது
தேனி: கூடலுார் பேச்சியம்மன் கோயில் தெரு அறிவழகன் 47. இவர் தனது வீட்டின் அருகே சட்டவிரோதமாக ரூ.2380 மதிப்புள்ள 17 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கியிருந்தார். அப்பகுதியில் ரோந்து சென்ற கூடலுார் வடக்கு போலீஸ் எஸ்.ஐ., கிருஷ்ணக்குமார் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து, பாட்டில்களை கைப்பற்றினர்.
தேனி: மதுரை ரோடு அண்ணாநகர் ராஜீவ்காந்தி 45. இவர் அதேப்பகுதி ரயில்வே கிராஸ் அருகில் 13 மதுபாட்டில்களை விற்னைக்காக வைத்திருந்தார். எஸ்.ஐ., முருகேசன் கைது செய்தார்.
கஞ்சா புகைத்தவர் கைது
தேனி: கண்டமனுார் போலீஸ் எஸ்.ஐ.,ஜான்செல்லதுரை தலைமையில் போலீசார் ராஜதானி மெயின்ரோடு வழியாக ரோந்து சென்றனர். அப்போது அதேப்பகுதி கீ.காமாட்சிபுரம் கிழக்குத்தெரு சூர்யா 22, அதேப்பகுதி மந்தையம்மன் கோயில் மேற்குத்தெரு சின்னன் 29, ஆகியோர் நின்றிருந்தனர். சூர்யா போலீசை பார்த்ததும், தான் குடித்துக் கொண்டிருந்த பீடியை அணைத்து எரிந்தார். சந்தேகத்தில் விசாரித்த போலீசாரிடம் சூர்யா, சின்னனிடம் ஒரு பொட்டலம் கஞ்சாவை வாங்கி அதில் பீடிக்கு சேர்த்தது போக, மீதியுள்ள 4 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிந்த கண்டமனுார் போலீசார், சூர்யாவை கைது செய்தனர்.