/உள்ளூர் செய்திகள்/தேனி/ போதைப்பொருள் என கூறி பணம் பறிக்கும் நுாதன மோசடி எச்சரிக்கையாக இருக்க போலீஸ் அறிவுரை போதைப்பொருள் என கூறி பணம் பறிக்கும் நுாதன மோசடி எச்சரிக்கையாக இருக்க போலீஸ் அறிவுரை
போதைப்பொருள் என கூறி பணம் பறிக்கும் நுாதன மோசடி எச்சரிக்கையாக இருக்க போலீஸ் அறிவுரை
போதைப்பொருள் என கூறி பணம் பறிக்கும் நுாதன மோசடி எச்சரிக்கையாக இருக்க போலீஸ் அறிவுரை
போதைப்பொருள் என கூறி பணம் பறிக்கும் நுாதன மோசடி எச்சரிக்கையாக இருக்க போலீஸ் அறிவுரை
ADDED : ஜூன் 09, 2024 04:41 AM

தேனி, : உங்கள் பெயரில் உள்ள சிம்கார்டை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு அனுப்பபட்டுள்ள பார்சலில் போதைப்பொருள் உள்ளது என கூறி ரூ.60 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டுள்ளது. இந்த நுதன மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுருத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் சமீப நாட்களாக ஓய்வூதியர்கள், வங்கியில் அதிக பரிவர்த்தனை செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஒரு கும்பல் 'ஸ்கைப் ஆப்' மூலம் வீடியோகாலில் போலீஸ் உடையில் தோன்றி மும்பை குற்றப்பிரிவு உயர் போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி,' உங்கள் பெயரில் உள்ள அலைபேசி எண்ணை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு பார்சல் அனுப்பபட்டுள்ளது. பார்சலில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் உள்ளது.
இது உங்களது பார்சல் இல்லை எனில் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை ரிசர்வ் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும். அதிகாரிகள் ஆய்வு செய்து பின் உங்கள் கணக்கிற்கு பணம் திருப்பி அனுப்பபடும் என்கிறார். அப்போது பணத்தை அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு எண்ணை அனுப்பி, இது குறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது. உங்கள் அலைபேசியில் இருந்து யாரையாவது தொடர்பு கொண்டால் வீட்டிற்கு போலீஸ் வரும் என பயமுறுத்து கின்றனர். பின் பணத்தை அனுப்ப கட்டாயப்படுத்து கின்றனர்.
வீட்டை பூட்டி வீட்டிற்குள் இருக்க கட்டாயப்படுத்துவர்.
இதுபோன்ற நுதன மோசடியால் தேனி மாவட்டத்தில் இரண்டு பேர் பணத்தை இழந்துள்ளனர். ஒருவர் ரூ.40ஆயிரம், மற்றொருவர் ரூ.20 ஆயிரம் இழந்துள்ளனர்.
இது போன்ற அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் பயப்படாமல் வழிப்புணர்வுடன் சைபர் கிரைம் போலீசாருக்கு 1930 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
பொதுமக்களிடம் ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் கும்பலை பிடிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.