/உள்ளூர் செய்திகள்/தேனி/ போடாங்குளத்தில் குப்பை, கழிவுநீர் சேர்வதால் மாசுபடும் அவலம் ஆக்கிரமிப்பால் சுருங்கி வரும் நீர் பிடிப்பு பகுதி போடாங்குளத்தில் குப்பை, கழிவுநீர் சேர்வதால் மாசுபடும் அவலம் ஆக்கிரமிப்பால் சுருங்கி வரும் நீர் பிடிப்பு பகுதி
போடாங்குளத்தில் குப்பை, கழிவுநீர் சேர்வதால் மாசுபடும் அவலம் ஆக்கிரமிப்பால் சுருங்கி வரும் நீர் பிடிப்பு பகுதி
போடாங்குளத்தில் குப்பை, கழிவுநீர் சேர்வதால் மாசுபடும் அவலம் ஆக்கிரமிப்பால் சுருங்கி வரும் நீர் பிடிப்பு பகுதி
போடாங்குளத்தில் குப்பை, கழிவுநீர் சேர்வதால் மாசுபடும் அவலம் ஆக்கிரமிப்பால் சுருங்கி வரும் நீர் பிடிப்பு பகுதி

ஆக்கிரமிக்க குப்பை டெக்னிக்
இக் குளத்தில் 50 சதவீத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
'நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம்'
ராஜாமுத்து, விவசாயி, பெரியகுளம்: இக் குளத்தின் நீரை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான ஏக்கரில் இருபோகம் நெல் சாகுபடி நடந்தது. தென்னை, மா, கரும்பு விவசாயம் களைகட்டும். முன்பு இந்தப்பகுதியில் விளைச்சலை பார்த்து 'போட்டி போட்டுக்கொண்டு' நிலங்களை குத்தகைக்கு எடுப்பர். தற்போது குளம் ஆக்கிரமிப்பினால் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு விவசாயம் செய்பவர்கள் குறைந்து வருகின்றனர். இந்தப்பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன் 40 அடி முதல் 50 அடியில் நிலத்தடி நீர்மட்டம் கிடைக்கும். தற்போது சில இடங்களில் 200 அடிக்கு தோண்டினால் தான் நீர் வருகிறது. நீர்வளத்துறை ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு தொடரும் பட்சத்தில் எதிர்கால சந்ததியினர் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அபாயநிலை ஏற்படும்.
கழிவுநீரால் மாசுபடும் அவலம்
குழந்தைவேல்,விவசாயி, பெரியகுளம்: குளம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது.