ADDED : மார் 13, 2025 05:48 AM

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அரங்கசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் மணி, ஆண்டவர் முன்னிலை வகித்தனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு 10 சதவீதம், 80 வயதை எட்டியவர்களுக்கு 20 சதவீத ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பிற ஓய்வூதியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ராமமூர்த்தி, நாகராஜன், சந்திரசேகர், பாலையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.