ADDED : ஜூன் 14, 2024 05:28 AM

கம்பம்: உலக சுற்றுச் சூழல் தினம் கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக பள்ளியில் நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் மாணவிகள் துளசி, ஆடாதொடை, கீழாநெல்லி, பெரு நெல்லி, உள்ளிட்ட பல்வேறு மூலிகை செடிகளை பள்ளி வளாகத்தில் நடவு செய்தனர். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக குழு தலைவர் சௌந்தரராசன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
உலக சுற்றுச்சூழல் மாதத்தை தொடர்ந்து இம் மாதம் முழுவதும் பள்ளி வளாகத்தில் மூலிகை செடிகள், பழ மரங்கள், ஆக்சிஜன் தரும் தாவரங்களை நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் தாளாளர் கவிதா, முதல்வர், ஆசிரியைகள் பங்கேற்றனர்.