/உள்ளூர் செய்திகள்/தேனி/ கோர்ட் வளாகத்தில் தகராறு: போலீஸ்காரர் கைது கோர்ட் வளாகத்தில் தகராறு: போலீஸ்காரர் கைது
கோர்ட் வளாகத்தில் தகராறு: போலீஸ்காரர் கைது
கோர்ட் வளாகத்தில் தகராறு: போலீஸ்காரர் கைது
கோர்ட் வளாகத்தில் தகராறு: போலீஸ்காரர் கைது
ADDED : ஜூன் 14, 2024 05:27 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட் வளாகத்தில் வாய்தாவிற்கு வந்தவருடன் தகராறு செய்த சி.ஆர்.பி.எப்., போலீசார் ஜெயப்பாண்டி 43,கைது செய்யப்பட்டார்.
கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்தவர் ஜெயப்பாண்டி. இவர் ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2022 ம் ஆண்டு இவரது மனைவி லட்சுமிக்கும், கம்பம் சுக்காங்கல்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சூர்யா 22, என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக லட்சுமி புகாரில் கம்பம் வடக்கு - போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டிற்கு லட்சுமி தனது கணவர் ஜெயப்பாண்டியுடன் வந்துள்ளார். சூரியாவும் வாய்தாவிற்கு வந்துள்ளார். மாஜிஸ்திரேட் ராமனாதன் முன்னிலையில் லட்சுமி சாட்சியம் அளித்துள்ளார். வழக்கு விசாரணை முடிந்து கோர்ட்டை விட்டு வெளியே வரும் போது, கோர்ட் வளாகத்திற்குள் ஜெயப் பாண்டி, சூர்யாவுடன் தகராறு செய்துள்ளார். தகவல் அறிந்த மாஜிஸ்திரேட் ராமனாதன் நடவடிக்கை எடுக்க உத்தமபாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் பாதிக்கப்பட்ட சூர்யாவிடம் புகார் பெற்று , சி.ஆர்.எப். போலீசார் ஜெயப்பாண்டியை கைது செய்தனர்.