/உள்ளூர் செய்திகள்/தேனி/ பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் நெல், வெற்றிலைக் கொடிக்கால் சேதம் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் நெல், வெற்றிலைக் கொடிக்கால் சேதம்
பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் நெல், வெற்றிலைக் கொடிக்கால் சேதம்
பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் நெல், வெற்றிலைக் கொடிக்கால் சேதம்
பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் நெல், வெற்றிலைக் கொடிக்கால் சேதம்
ADDED : ஜூன் 04, 2024 06:11 AM

தேவதானப்பட்டி : மாவட்டத்தில் அதிகபட்சமாக பெரியகுளத்தில் பலத்த காற்றுடன் பெய்த 90.4 மி.மீ., மழையால் மேல்மங்கலம் பகுதியில் நூற்றுக்கும் அதிகமான ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த நெல், வெற்றிலை பயிர்கள் சேதமடைந்தது.
பெரியகுளம் தாலுகா பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 2 மணி நேரம் கனமழை பெய்தது. மாவட்டத்தில் பெரியகுளத்தில் அதிகபட்சமாக 90.4 மி.மீ., மழை பெய்தது.
இதனால் ரோட்டோரங்களில் இருந்த மரங்கள் ஒடிந்ததில் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் பகுதியில் காற்றுடன் மழை பெய்தது.
மேல்மங்கலம் பகுதியில் 500 ஏக்கருக்கும் அதிகமாக நெல் பயிரிடப்பட்டுள்ளது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது.
நெல் விவசாயி ராஜா உட்பட ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெயமங்கலம் பகுதியில் வெற்றிலை கொடிக்காலில் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாரான நிலையில் வீசிய பலத்த காற்றால் 5 ஏக்கர் வெற்றிலை கொடிக்கால் சேதமானது.
விவசாயி முத்துமணி உட்பட ஏராளமான விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு பயிர்கள் சேதங்களை கணக்கீடு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.