/உள்ளூர் செய்திகள்/தேனி/ ரேஷன் மண்ணெண்ணெய்யில் கலப்படம்: போலீசார் விசாரணை ரேஷன் மண்ணெண்ணெய்யில் கலப்படம்: போலீசார் விசாரணை
ரேஷன் மண்ணெண்ணெய்யில் கலப்படம்: போலீசார் விசாரணை
ரேஷன் மண்ணெண்ணெய்யில் கலப்படம்: போலீசார் விசாரணை
ரேஷன் மண்ணெண்ணெய்யில் கலப்படம்: போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 04, 2024 06:10 AM
மூணாறு : மூணாறில் ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்கப்பட்ட மண்ணெண்ணெயில் தண்ணீர் கலந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரளாவில் ரேஷன் கடைகளுக்கு தேவையான பொருட்கள் அரசு சார்பிலான 'சப்ளை கோ' நிறுவனம் மூலம் வினியோகிக்கப்படுகிறது. அதன்படி மூணாறில் ஊராட்சி அலுவலகம் ரோட்டில் உள்ள சப்ளை கோவுக்கு சொந்தமான மண்ணெண்ணெய் டிப்போவில் இருந்து ரேஷன் கடைகளுக்கு தண்ணீர் கலந்த மண்ணெண்ணெய் வினியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அது குறித்து சப்ளை கோ விஜிலன்ஸ் பிரிவினர் விசாரணை நடத்தினார்.
அதில் மூணாறைச் சேர்ந்த இளநிலை ஊழியர் ராஜூ டிப்போவில் பொறுப்பு வகித்தபோது 562 லிட்டர் தண்ணீர் கலந்ததாக தெரியவந்தது. அவரை சப்ளை கோ கூடுதல் பொது மேலாளர் சூராஜ் பத்து நாட்களுக்கு முன்பு பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார்.
இந்நிலையில் அச்சம்பவம் குறித்து விசாரிக்குமாறு சப்ளை கோ கோட்டயம் மண்டல மேலாளர் ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் எஸ்.ஐ. அஜேஷ் கே. ஜான் விசாரிக்கிறார்.