/உள்ளூர் செய்திகள்/தேனி/ வேளாண் கிடங்குகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு உத்தரவு வேளாண் கிடங்குகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு உத்தரவு
வேளாண் கிடங்குகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு உத்தரவு
வேளாண் கிடங்குகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு உத்தரவு
வேளாண் கிடங்குகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு உத்தரவு
ADDED : ஜூன் 15, 2024 07:09 AM
கம்பம் : வேளாண் கிடங்குளில் விதை, உரம், நுண்ணூட்ட உரங்கள், பூச்சி மருந்து விற்பனையில் பண பரிவர்த்தனை ஆன் லைனில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என வேளாண் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறது. அரசு துறைகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. பண பரிவர்த்தனை டிஜிட்டல் முறையில் இருக்க அறிவுறுத்தி வருகிறது. வருவாய்த்துறை, பத்திரப்பதிவு, வட்டார போக்குவரத்து அலுவலகம் என அனைத்து அலுவலகங்களும் கணினி மயம் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாறி விட்டது.
வேளாண் துறையிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்ய வேளாண் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. பண பரிவர்த்தனை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளவில்லை. கணிசமானோர் அப்டேட் ஆகாமல் உள்ளனர். படிப்படியாக மாற்ற வேண்டும் என்றும், இனி வேளாண் கிட்டங்கிகளில் பண பரிவர்த்தனை மூலம் தான் விற்பனை செய்ய வேண்டும் என்றும் வேளாண் இயக்குனரகம் கண்டிப்புடன் கூடிய உத்தரவு பிறப்பித்துள்ளது.