ADDED : ஜூன் 15, 2024 11:21 PM
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் திம்மரசநாயக்கனுார், டி.பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், ஏத்தக்கோவில், உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது.
மழை, பனி, அதிகப்படியான காற்று மல்லிகை விளைச்சலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். வெயில் காலங்களில் விளைச்சல் அதிகம் கிடைக்கும். கடந்த சில மாதங்களில் வாட்டி வதைத்த வெயிலால் பூக்கள் விளைச்சல் அதிகம் இருந்தது. சமீபத்தில் பெய்த மழை அதனை தொடர்ந்து தற்போது வீசும் காற்றால் விளைச்சல் பாதித்துள்ளது. தேவைக்கேற்ற வரத்து இல்லாததால், ஆண்டிபட்டியில் நேற்று மல்லிகை பூ கிலோ 1200 ரூபாய்க்கு விற்பனையானது.