ADDED : ஜூலை 30, 2024 06:15 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் மணியக்காரன்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டி 35, கலைக்குழு நடத்தி வருகிறார். இதே ஊரைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி ராஜா 35, அப்பகுதியில் மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார்.
இரு நாட்களுக்கு முன் தனது கடையில் அசிங்கமாக பேசிக்கொண்டு இறைச்சியை வெட்டிக் கொண்டிருந்தார். அங்கு சென்ற தங்கப்பாண்டி பொது இடத்தில் அசிங்கமாக பேசுவது குறித்து தட்டி கேட்டுள்ளார்.
இதில் கோபமடைந்த வேளாங்கண்ணி ராஜா மாட்டு இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டியதில் தங்கப்பாண்டிக்கு தொடையில் காயம் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.