/உள்ளூர் செய்திகள்/தேனி/ பாலசுப்பிரமணியர் கோயிலில் ஆடி கார்த்திகை கோலாகலம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ஆடி கார்த்திகை கோலாகலம்
பாலசுப்பிரமணியர் கோயிலில் ஆடி கார்த்திகை கோலாகலம்
பாலசுப்பிரமணியர் கோயிலில் ஆடி கார்த்திகை கோலாகலம்
பாலசுப்பிரமணியர் கோயிலில் ஆடி கார்த்திகை கோலாகலம்
ADDED : ஜூலை 30, 2024 06:15 AM

பெரியகுளம் : பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ஆடி கார்த்திகை விழா கோலாகலமாக நடந்தது. பெரியகுளம் பகுதி பக்தர்கள் கோயில் அருகே உள்ள வராகநதியில் குளித்து விட்டு, காலை 6:00 மணி முதல் ஏராளமான பக்தர்கள் 'அரோகரா அரோகரா' கோஷம் முழங்க சுவாமியை வழிபட்டனர்.
உற்ஸவர் பாலசுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு பால், தயிர், பன்னீர், தேன், சந்தனம் உட்பட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்தனர். மூலவர் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார்.
காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வள்ளி, தெய்வானை, சிவசுப்ரமணியருக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.