/உள்ளூர் செய்திகள்/தேனி/ மூணாறு மார்க்கெட்டுக்கு வாரவிடுமுறை இல்லை நாள் முழுவதும் செயல்பட அனுமதி மூணாறு மார்க்கெட்டுக்கு வாரவிடுமுறை இல்லை நாள் முழுவதும் செயல்பட அனுமதி
மூணாறு மார்க்கெட்டுக்கு வாரவிடுமுறை இல்லை நாள் முழுவதும் செயல்பட அனுமதி
மூணாறு மார்க்கெட்டுக்கு வாரவிடுமுறை இல்லை நாள் முழுவதும் செயல்பட அனுமதி
மூணாறு மார்க்கெட்டுக்கு வாரவிடுமுறை இல்லை நாள் முழுவதும் செயல்பட அனுமதி
ADDED : ஜூன் 18, 2024 05:28 AM
மூணாறு : மூணாறில் காய்கறி மார்க்கெட்டை அனைத்து நாட்களிலும் திறப்பதற்கு தனியார் தேயிலை கம்பெனி நிர்வாகம் அனுமதி அளித்தது.
மூணாறில் காய்கறி மார்க்கெட் உள்பட நகர் முழுவதும் பிரபல தனியார் தேயிலை கம்பெனியின் கட்டுப்பாட்டில் உள்ளன. கடைகளுக்கு கம்பெனி நிர்வாகம் வாடகை வசூலிக்கின்றது. நகரின் மையப்பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது. அதற்கு வாரம்தோறும் புதன் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
மூணாறு நகர் சுற்றுலா பகுதி என்பதால் தங்கும் விடுதி, ஓட்டல், கடை ஆகியவற்றிற்கு வாரம் முழுவதும் காய்கறி வினியோகம் நடக்கும். புதன் கிழமை மார்க்கெட் திறக்கப்படுவதில்லை என்பதால் காய்கறி வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இருப்பினும் மார்க்கெட்டின் முன்பகுதியில் ரோட்டோரம் வாகனங்களை நிறுத்தி காய்கறி விற்பனை நடந்தது. அதனால் பண்டிகை விடுமுறை, சுற்றுலா சீசன் ஆகிய நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வர்த்தகர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.
அதனால் புதன் கிழமை தோறும் மார்க்கெட்டை திறப்பதற்கு அனுமதிக்குமாறு 2021 ஜூன் முதல் கம்பெனி நிர்வாகத்தினரிடம் மார்க்கெட் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்து வந்தனர். அதனை ஏற்று நாளை (ஜூன் 19) முதல் அனைத்து நாட்களிலும் மார்க்கெட்டை திறப்பதற்கு கம்பெனி நிர்வாகம் நேற்று அனுமதி அளித்தது. இத்தகவலை மார்க்கெட் வர்த்தக சங்க தலைவர் சந்திரன், செயலாளர் பாலசிங் ஆகியோர் தெரிவித்தனர்.