/உள்ளூர் செய்திகள்/தேனி/ டெங்கு தடுப்பு பணி வழங்காததால் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை டெங்கு தடுப்பு பணி வழங்காததால் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
டெங்கு தடுப்பு பணி வழங்காததால் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
டெங்கு தடுப்பு பணி வழங்காததால் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
டெங்கு தடுப்பு பணி வழங்காததால் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : ஆக 02, 2024 06:56 AM

கம்பம்: காமயகவுண்டன்பட்டியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி செய்த மஸ்தூர்களுக்கு பணி வழங்காததை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் 12 பேர் டெங்கு தடுப்பு மஸ்துார் பணி செய்து வந்தனர். தற்போது 2024-2025 ம் ஆண்டிற்கு 12 மஸ்தூர்களை பேரூராட்சி நிர்வாகம் டெங்கு தடுப்பு பணிககு நியமிக்க டெண்டர் கோரியது. அதில் புதிய குழுவிற்கு ஆணை வழங்கப்பட்டது. பழைய குழுவில் உள்ளவர்களுக்கு கிடைக்கவில்லை - இந்நிலையில் புதிதாக டெண்டர் எடுத்த குழுவிற்கும் பணிகள் வழங்கவில்லை. இதனால் பிரச்னை ஏற்பட்டது.
எம்.எல்.ஏ. மகாராஜன் தலையிட்டு இரண்டு குழுவிலும் உள்ள 20 பேர்களுக்கு பணி வழங்க கூறினார். ஆனால் இதுவரை இரண்டு குழுவினருக்கும் பணி வழங்கவில்லை. 3 மாதங்களுக்கும் மேலாக பணி ஒதுக்கீடு செய்யாமல் பேரூராட்சி நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் பெண்கள் பணி வழங்க கோரி நேற்று முன்தினம் காலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
பேரூராட்சிகளின் தலைவர் வேல்முருகன் கூறுகையில், ஒராண்டிற்கு ஒரு முறை டெண்டர் மூலம் மஸ்தூர் நியமனம் செய்யப்படுகின்றனர். கடந்த மார்ச்சில் புதிய குழுவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழைய குழுவினரும் வேலை கேட்டு எம்.எல்.ஏ. வை அணுகினர். எம்.எல்.ஏ., அறிவுறுத்தலின் படி இரு குழுவில் உள்ளவர்களுக்கும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டு, உதவி இயக்குனர் அலுவலக அனுமதிக்காக காத்திருக்கிறோம். இரு குழுக்களில் உள்ளவர்களுக்கு பணி வழங்கப்படும். என்றார்