ADDED : ஆக 02, 2024 06:53 AM

தேவதானப்பட்டி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 5 வயது ஆண் கரடி பலியானது.
பெரியகுளம் அருகே காட்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு ரோட்டை கடக்க முயன்ற 5 வயது ஆண் கரடி அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரோட்டோரம் பலியாகி கிடந்தது.
தேவதானப்பட்டி போலீசார், பெரியகுளம் வனத்துறை ரேஞ்சர் ஆதிரைக்கு தகவல் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்கு கரடியின் உடல் பெரியகுளம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தேவதானப்பட்டி போலீசார், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.