ADDED : ஜூலை 31, 2024 05:09 AM

கம்பம், : கம்பம் எம்.எல்.ஏ. மற்றும் தேனி தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளருமான என். ராமகிருஷ்ணன் பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது.
முதியோர் இல்லத்திற்கு சென்று புத்தாடைகள், உணவுகள் வழங்கினார். எம்.எல்.ஏ. மகாராசன், முன்னாள் டில்லி சிறப்பு பிரதிநிதி செல்வேந்திரன், சின்னமனூர் நகராட்சி தலைவர் அய்யம்மாள், மாவட்ட பிரதிநிதி இரா.செந்தில்குமார், சின்னமனூர் நகர் செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட நகர், ஒன்றிய செயலாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.