ADDED : ஜூன் 20, 2024 05:15 AM
தேனி: மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நாளை(ஜூன் 21) தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதில் 10ம் வகுப்பிற்கு கீழ் கல்வித் தகுதி உடையவர்கள் முதல் பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., படித்தவர்கள் பங்கேற்கலாம். வேலை நாடுநர்கள் சுயவிபர நகல், கல்வி சான்றிதழ்களுடன் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக அலைபேசி 94990 55936 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.