/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனியில் விதியை பின்பற்றாமல் நடக்கும் ரோடு அமைக்கும் பணி தேனியில் விதியை பின்பற்றாமல் நடக்கும் ரோடு அமைக்கும் பணி
தேனியில் விதியை பின்பற்றாமல் நடக்கும் ரோடு அமைக்கும் பணி
தேனியில் விதியை பின்பற்றாமல் நடக்கும் ரோடு அமைக்கும் பணி
தேனியில் விதியை பின்பற்றாமல் நடக்கும் ரோடு அமைக்கும் பணி
ADDED : ஜூன் 22, 2024 05:43 AM

தேனி: தேனி நகராட்சி பகுதியில் அரசின் விதியை பின்பற்றாமல் ரோடு அமைக்கும் பணி நடந்தது.
தேனி என்.ஆர்.டி., நகரில் சிவகணேச கந்தபெருமாள் கோயில் அருகே ரோடு அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியின் போது பழைய ரோட்டினை சுரண்டாமல், அதன்மேல் தார் ஊற்றி ரோடு அமைக்கும் பணி நடந்தது. பழைய ரோட்டின் மீது புது ரோடு அமைக்கும் போது பழைய ரோட்டினை கிளறி விட்டு அதன்மேல் தார் ஊற்றி ரோடு அமைப்பது வழக்கம். ஆனால் என்.ஆர்.டி. நகரில் அவ்வாறு செய்யாமல் அவசரகதியில் பழைய ரோட்டின் மீது தார் ஊற்றி ரோடு பணி மேற்கொண்டனர். பழைய ரோட்டின் மீது நேரடியாக புதிய ரோடு அமைப்பதால் பிடிமானம் இன்றி விரைவில் ரோடு சேதடையும் நிலை உள்ளது. இதே போல் என்.ஆர்.டி., பூங்காவை ஒட்டி செல்லும் சமதர்மபுரத்தில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோட்டிலும் ரோடு அமைத்தனர். அதே நேரம் இரு ரோடுகளையும் இணைக்கும் காமராஜர் ரோட்டில் புது ரோடு அமைக்க பழைய ரோடு வாகனம் மூலம் ரோட்டை கிளறி பின் பணி மேற் கொண்டனர்.
இது குறித்து நகராட்சி உதவிப்பொறியாளர் முருகனிடம் கேட்ட போது, இந்த ரோடு கடந்தாண்டு ஒப்பந்தத்தில் டெண்டர் விடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் ரோட்டினை (மில்லிங்) கிளறி விட்டு அமைக்க வேண்டும் என்ற விதி இல்லை. மேலும் குறிப்பிட்ட அந்த ரோடு 3 செ.மீ., மட்டுமே உயரமாககப்படுகிறது. மற்ற ரோடுகள் மில்லிங் செய்யப்பட்டு அமைக்கப்படும். என்றார். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தரமான ரோடுகள் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.